×

நடிகர் வடிவேல் பாணியில் இங்க ஒரு குத்து! அங்க ஒரு குத்து!!! நன்றி மறவாத சேட்டை வாக்காளர்

நெல்லை: நகைச்சுவை நடிகர் வடிவேல் நடித்த ஒரு படத்தில் தேர்தல் காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கும். அதில் வேட்பாளர்களிடம் ஓட்டுக்கு பணம் வாங்கியிருக்கும் நபர், ‘அண்ணே அவர்கிட்ட வாங்கிய காசுக்கு அவர் சின்னத்துல ஒரு குத்து, உங்க கிட்ட வாங்கிய காசுக்கு உங்க சின்னத்துல ஒரு குத்து’ என்று கூறுவார். அதேபோன்று மற்றொருவர், ‘அம்மா சத்தியமா உனக்குத்தான் ஓட்டு போட்டேன்’ என்று கூறியபடி, கையோடு தான் வாக்களித்த சீட்டை எடுத்துவந்து காண்பிப்பார். தற்போது இந்த காட்சிகள் நிஜமாகவே அரங்கேறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த 6ம் தேதி 5 ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

இதில் ஒரு கிராமத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தாங்கள் வெற்றி பெற வேண்டி அப்பகுதி வாக்காளர்களை நன்கு மனம் குளிர கவனித்துள்ளனர். வேட்பாளர்களின் கவனிப்பால் நன்றி மறவாத ஒரு வாக்காளர், தன்னை கவனித்த அனைத்து உறுப்பினர்களின் சின்னத்திலும் ஓட்டு குத்திவிட்டு, அதை உறுதிப்படுத்தி காண்பிப்பதற்காக ைகயோடு அந்த சீட்டை எடுத்து வந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் உண்மைதானா? அல்லது வேண்டுமென்றே யாராவது இதுபோன்று தவறான படத்தை பதிவிட்டு குழப்புகின்றனரா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Inga ,Vael , Actor Vadivelu, here's a punch! There's a punch, thank you forgetful prank, voter
× RELATED காசு வாங்க போனேன் படம் வாங்கி வந்தேன்: சந்தானம் ‘கலகல’